Śrī Aruṇācala Aṣṭakam
Eight Verses to Arunachala

By Sri Ramana Maharshi
Translated by Michael James

This translation appeared earlier on Michael James’s YouTube channel.

Verse 1

Show Tamil

அறிவறு கிரியென வமர்தரு மம்மா வதிசய மிதன்செய லறிவரி தார்க்கு

மறிவறு சிறுவய ததுமுத லருணா சலமிகப் பெரிதென வறிவினி லங்க

வறிகில னதன்பொரு ளதுதிரு வண்ணா மலையென வொருவரா லறிவுறப் பெற்று

மறிவினை மருளுறுத் தருகினி லீர்க்க வருகுறு மமயமி தசலமாக் கண்டேன்.

aṟivaṟu giriyeṉa vamardaru mammā vatiśaya midaṉceya laṟivari dārkku

maṟivaṟu siṟuvaya dadumuda laruṇā calamihap perideṉa vaṟiviṉi laṅga

vaṟihila ṉadaṉporu ḷadutiru vaṇṇā malaiyeṉa voruvarā laṟivuṟap peṯṟu

maṟiviṉai maruḷuṟut taruhiṉi līrkka varuhuṟu mamayami dacalamāk kaṇḍēṉ.

பதச்சேதம்: அறிவு அறு கிரி என அமர்தரும். அம்மா, அதிசயம் இதன் செயல் அறி அரிது ஆர்க்கும். அறிவு அறு சிறு வயது அது முதல் அருணாசலம் மிக பெரிது என அறிவின் இலங்க, அறிகிலன் அதன் பொருள் அது திருவண்ணாமலை என ஒருவரால் அறிவு உற பெற்றும். அறிவினை மருள் உறுத்து அருகினில் ஈர்க்க, அருகு உறும் அமயம் இது அசலம் ஆ கண்டேன்.

Padacchēdam (word-separation): aṟivu aṟu giri eṉa amardarum. ammā, atiśayam idaṉ seyal aṟi aridu ārkkum. aṟivu aṟu siṟu vayadu adu mudal aruṇācalam miha peridu eṉa aṟiviṉ ilaṅga, aṟihilaṉ adaṉ poruḷ adu tiruvaṇṇāmalai eṉa oruvarāl aṟivu uṟa peṯṟum. aṟiviṉai maruḷ uṟuttu aruhiṉil īrkka, aruhu uṟum amayam idu acalam ā kaṇḍēṉ.

அன்வயம்: அறிவு அறு கிரி என அமர்தரும். அம்மா, அதிசயம் இதன் செயல் அறி அரிது ஆர்க்கும். அறிவு அறு சிறு வயது அது முதல் அருணாசலம் மிக பெரிது என அறிவின் இலங்க, அது திருவண்ணாமலை என ஒருவரால் அறிவு உற பெற்றும் அதன் பொருள் அறிகிலன். அறிவினை மருள் உறுத்து அருகினில் ஈர்க்க, அருகு உறும் அமயம் இது அசலம் ஆ கண்டேன்.

Anvayam (words rearranged in natural prose order): aṟivu aṟu giri eṉa amardarum. ammā, atiśayam idaṉ seyal aṟi aridu ārkkum. aṟivu aṟu siṟu vayadu adu mudal aruṇācalam miha peridu eṉa aṟiviṉ ilaṅga, adu tiruvaṇṇāmalai eṉa oruvarāl aṟivu uṟa peṯṟum adaṉ poruḷ aṟihilaṉ. aṟiviṉai maruḷ uṟuttu aruhiṉil īrkka, aruhu uṟum amayam idu acalam ā kaṇḍēṉ.

English translation: It sits calmly as a hill [seemingly] bereft of awareness [or knowledge], [but] ah, its action is pre-eminent [or wonderful], difficult for anyone to understand. Though from [my] young age, [when I was] bereft of knowledge, Arunachalam shone in [my] awareness [or mind] as something exceedingly great, even [after] coming to know from someone that it is Tiruvannamalai I did not know its poruḷ [substance, reality, truth, import, meaning or significance]. When it enchanted [my] awareness [or mind] and drew [my body] near, at the opportune time of coming near I saw it to be acalam [a hill or what is motionless].

Show explanations and discussions

Verse 2

Show Tamil

கண்டவ னெவனெனக் கருத்தினு ணாடக் கண்டவ னின்றிட நின்றது கண்டேன்

கண்டன னென்றிடக் கருத்தெழ வில்லை கண்டில னென்றிடக் கருத்தெழு மாறென்

விண்டிது விளக்கிடு விறலுறு வோனார் விண்டிலை பண்டுநீ விளக்கினை யென்றால்

விண்டிடா துன்னிலை விளக்கிட வென்றே விண்டல மசலமா விளங்கிட நின்றாய்.

kaṇḍava ṉevaṉeṉak karuttiṉu ṇāḍak kaṇḍava ṉiṉḏṟiḍa niṉḏṟadu kaṇḍēṉ

kaṇḍaṉa ṉeṉḏṟiḍak karutteṙa villai kaṇḍila ṉeṉḏṟiḍak karutteṙu māṟeṉ

viṇḍidu viḷakkiḍu viṟaluṟu vōṉār viṇḍilai paṇḍunī viḷakkiṉai yeṉḏṟāl

viṇḍiṭā duṉṉilai viḷakkiḍa veṉḏṟē viṇḍala macalamā viḷaṅgiḍa niṉḏṟāy.

பதச்சேதம்: கண்டவன் எவன் என கருத்தின் உள் நாட, கண்டவன் இன்றிட நின்றது கண்டேன். ‘கண்டனன்’ என்றிட கருத்து எழ இல்லை; ‘கண்டிலன்’ என்றிட கருத்து எழுமாறு என்? விண்டு இது விளக்கிடு விறல் உறுவோன் ஆர், விண்டு இலை பண்டு நீ விளக்கினை என்றால்? விண்டிடாது உன் நிலை விளக்கிட என்றே விண் தலம் அசலமா விளங்கிட நின்றாய்.

Padacchēdam (word-separation): kaṇḍavaṉ evaṉ eṉa karuttiṉ uḷ nāḍa, kaṇḍavaṉ iṉḏṟiḍa niṉḏṟadu kaṇḍēṉ. ‘kaṇḍaṉaṉ’ eṉḏṟiḍa karuttu eṙa illai; ‘kaṇḍilaṉ’ eṉḏṟiḍa karuttu eṙum-āṟu eṉ? viṇḍu idu viḷakkiḍu viṟal uṟuvōṉ ār, viṇḍu ilai paṇḍu nī viḷakkiṉai eṉḏṟāl? viṇḍiḍādu uṉ nilai viḷakkiḍa eṉḏṟē viṇ ṭalam acalamā viḷaṅgiḍa niṉḏṟāy.

அன்வயம்: கண்டவன் எவன் என கருத்தின் உள் நாட, கண்டவன் இன்றிட நின்றது கண்டேன். ‘கண்டனன்’ என்றிட கருத்து எழ இல்லை; ‘கண்டிலன்’ என்றிட கருத்து எழுமாறு என்? பண்டு நீ விண்டு இலை விளக்கினை என்றால், விண்டு இது விளக்கிடு விறல் உறுவோன் ஆர்? விண்டிடாது உன் நிலை விளக்கிட என்றே விண் தலம் அசலமா விளங்கிட நின்றாய்.

Anvayam (words rearranged in natural prose order): kaṇḍavaṉ evaṉ eṉa karuttiṉ uḷ nāḍa, kaṇḍavaṉ iṉḏṟiḍa niṉḏṟadu kaṇḍēṉ. ‘kaṇḍaṉaṉ’ eṉḏṟiḍa karuttu eṙa illai; ‘kaṇḍilaṉ’ eṉḏṟiḍa karuttu eṙum-āṟu eṉ? paṇḍu nī viṇḍu ilai viḷakkiṉai eṉḏṟāl, viṇḍu idu viḷakkiḍu viṟal uṟuvōṉ ār? viṇḍiḍādu uṉ nilai viḷakkiḍa eṉḏṟē viṇ ṭalam acalamā viḷaṅgiḍa niṉḏṟāy.

English translation: When [the seer] investigated within the mind who the seer is, I saw what remained when the seer [thereby] became non-existent. The mind does not rise to say ‘I saw’, [so] in what way could the mind rise to say ‘I did not see’? Who has the power to elucidate this [by] speaking, when in ancient times [even] you [as Dakshinamurti] elucidated [it] without speaking? Only to elucidate your state [of silent and motionless pure self-awareness] without speaking, you stood as a hill [or motionlessly] shining [from] earth [to] sky [though actually beyond the limits of both].

Show explanations and discussions

Verse 3

Show Tamil

நின்னையா னுருவென வெண்ணியே நண்ண நிலமிசை மலையெனு நிலையினை நீதா

னுன்னுரு வருவென வுன்னிடின் விண்ணோக் குறவுல கலைதரு மொருவனை யொக்கு

முன்னுரு வுனலற வுன்னிட முந்நீ ருறுசருக் கரையுரு வெனவுரு வோயு

மென்னையா னறிவுற வென்னுரு வேறே திருந்தனை யருணவான் கிரியென விருந்தோய்.

niṉṉaiyā ṉuruveṉa veṇṇiyē naṇṇa nilamisai malaiyeṉu nilaiyiṉai nīdā

ṉuṉṉuru varuveṉa vuṉṉiḍiṉ viṇṇōk kuṟavula halaidaru moruvaṉai yokku

muṉṉuru vuṉalaṟa vuṉṉiḍa munnī ruṟusaruk karaiyuru veṉavuru vōyu

meṉṉaiyā ṉaṟivuṟa veṉṉuru vēṟē dirundaṉai yaruṇavāṉ giriyeṉa virundōy.

பதச்சேதம்: நின்னை யான் உரு என எண்ணியே நண்ண, நிலமிசை மலை எனும் நிலையினை நீ தான். உன் உரு அரு என உன்னிடில், விண் நோக்குற உலகு அலை தரும் ஒருவனை ஒக்கும். உன் உரு உனல் அற உன்னிட, முன் நீர் உறு சருக்கரை உரு என உரு ஓயும். என்னை யான் அறிவுற, என் உரு வேறு ஏது? இருந்தனை அருண வான் கிரி என இருந்தோய்.

Padacchēdam (word-separation): niṉṉai yāṉ uru eṉa eṇṇiyē naṇṇa, nilamisai malai eṉum nilaiyiṉai nī tāṉ. uṉ uru aru eṉa uṉṉiḍil, viṇ ṇōkkuṟa ulahu alai tarum oruvaṉai okkum. uṉ uru uṉal aṟa uṉṉiḍa, muṉ-nīr uṟu sarukkarai-y-uru eṉa uru ōyum. eṉṉai yāṉ aṟivuṟa, eṉ uru vēṟu ēdu? irundaṉai aruṇa-vāṉ-giri eṉa irundōy.

அன்வயம்: யான் நின்னை உரு என எண்ணியே நண்ண, நீ தான் நிலமிசை மலை எனும் நிலையினை. உன் உரு அரு என உன்னிடில், விண் நோக்குற உலகு அலை தரும் ஒருவனை ஒக்கும். உன் உரு உனல் அற உன்னிட, முன் நீர் உறு சருக்கரை உரு என உரு ஓயும். என்னை யான் அறிவுற, என் உரு வேறு ஏது? அருண வான் கிரி என இருந்தோய் இருந்தனை.

Anvayam (words rearranged in natural prose order): yāṉ niṉṉai uru eṉa eṇṇiyē naṇṇa, nī tāṉ nilamisai malai eṉum nilaiyiṉai. uṉ uru aru eṉa uṉṉiḍil, viṇ ṇōkkuṟa ulahu alai tarum oruvaṉai okkum. uṉ uru uṉal aṟa uṉṉiḍa, muṉ-nīr uṟu sarukkarai-y-uru eṉa uru ōyum. eṉṉai yāṉ aṟivuṟa, eṉ uru vēṟu ēdu? aruṇa-vāṉ-giri eṉa irundōy irundaṉai.

English translation: When I approach thinking of you as a form, you yourself stand as a hill on earth. If one thinks of [or meditates upon] your form as formless, one is like someone who wanders about the world in order to see the sky. [But] when without thinking one thinks of your form [that is, when one attends only to ‘I am’, which is your true form], [one’s own] form [one’s ego or separate individuality] will cease to exist like a sugar-form placed in the ocean. When I know myself, what else is my form [other than you]? You, who exist as the great Aruna Hill, [alone] are.

Show explanations and discussions

Verse 4

Show Tamil

இருந்தொளி ருனைவிடுத் தடுத்திட றெய்வ மிருட்டினை விளக்கெடுத் தடுத்திட லேகா

ணிருந்தொளி ருனையறி வுறுத்திடற் கென்றே யிருந்தனை மதந்தொறும் விதவித வுருவா

யிருந்தொளி ருனையறி கிலரெனி லன்னோ ரிரவியி னறிவறு குருடரே யாவா

ரிருந்தொளி ரிரண்டற வெனதுளத் தொன்றா யிணையறு மருணமா மலையெனு மணியே.

irundoḷi ruṉaiviḍut taḍuttiḍa ṟeyva miruṭṭiṉai viḷakkeḍut taḍuttiḍa lēkā

ṇirundoḷi ruṉaiyaṟi vuṟuttiḍaṯ keṉḏṟē yirundaṉai madandoṟum vidhavidha vuruvā

yirundoḷi ruṉaiyaṟi hilareṉi laṉṉō riraviyi ṉaṟivaṟu kuruḍarē yāvā

rirundoḷi riraṇḍaṟa veṉaduḷat toṉḏṟā yiṇaiyaṟu maruṇamā malaiyeṉu maṇiyē.

பதச்சேதம்: இருந்து ஒளிர் உனை விடுத்து அடுத்திடல் தெய்வம் இருட்டினை விளக்கு எடுத்து அடுத்திடலே காண். இருந்து ஒளிர் உனை அறிவு உறுத்திடற்கு என்றே, இருந்தனை மதம் தொறும் வித வித உருவாய். இருந்து ஒளிர் உனை அறிகிலர் எனில், அன்னோர் இரவியின் அறிவு அறு குருடரே ஆவார். இருந்து ஒளிர் இரண்டு அற எனது உளத்து ஒன்றாய், இணையறும் அருண மா மலை எனும் மணியே.

Padacchēdam (word-separation): irundu oḷir uṉai viḍuttu aḍuttiḍal deyvam iruṭṭiṉai viḷakku eḍuttu aḍuttiḍalē kāṇ. irundu oḷir uṉai aṟivu uṟuttiḍaṟku eṉḏṟē, irundaṉai matam toṟum vidha vidha uruvāy. irundu oḷir uṉai aṟihilar eṉil, aṉṉōr iraviyiṉ aṟivu aṟu kuruḍarē āvār. irundu oḷir iraṇḍu aṟa eṉadu uḷattu oṉḏṟāy, iṇai-y-aṟum aruṇa mā malai eṉum maṇiyē.

அன்வயம்: இருந்து ஒளிர் உனை விடுத்து தெய்வம் அடுத்திடல் விளக்கு எடுத்து இருட்டினை அடுத்திடலே காண். இருந்து ஒளிர் உனை அறிவு உறுத்திடற்கு என்றே மதம் தொறும் வித வித உருவாய் இருந்தனை. இருந்து ஒளிர் உனை அறிகிலர் எனில், அன்னோர் இரவியின் அறிவு அறு குருடரே ஆவார். இணையறும் அருண மா மலை எனும் மணியே, எனது உளத்து இரண்டு அற ஒன்றாய் இருந்து ஒளிர்.

Anvayam (words rearranged in natural prose order): irundu oḷir uṉai viḍuttu deyvam aḍuttiḍal viḷakku eḍuttu iruṭṭiṉai aḍuttiḍalē kāṇ. irundu oḷir uṉai aṟivu uṟuttiḍaṟku eṉḏṟē matam toṟum vidha vidha uruvāy irundaṉai. irundu oḷir uṉai aṟihilar eṉil, aṉṉōr iraviyiṉ aṟivu aṟu kuruḍarē āvār. iṇai-y-aṟum aruṇa mā malai eṉum maṇiyē, eṉadu uḷattu iraṇḍu aṟa oṉḏṟāy irundu oḷir.

English translation: See, seeking God [while] leaving [or neglecting] you, who exist and shine [eternally in one’s heart as pure awareness, which is the real nature of God], is just [like] seeking darkness [by] taking a lamp. Only to raise [or spread] awareness of yourself, who exist and shine [as the sole reality], you exist in each mata [spiritual philosophy, religion or system of belief] as various forms. If one does not know you, who exist and shine [as the light that illumines the mind, enabling it to know other things], one just [like] a blind person who has no knowledge of the sun. Gem [of pure awareness] called the peerless great Aruna Hill, exist and shine in my heart as one without a second.

Show explanations and discussions

Verse 5

Show Tamil

மணிகளிற் சரடென வுயிர்தொறு நானா மதந்தொறு மொருவனா மருவினை நீதான்

மணிகடைந் தெனமன மனமெனுங் கல்லின் மறுவறக் கடையநின் னருளொளி மேவும்

மணியொளி யெனப்பிறி தொருபொருட் பற்று மருவுற லிலைநிழற் படிதகட் டின்விண்

மணியொளி படநிழல் பதியுமோ வுன்னின் மறுபொரு ளருணநல் லொளிமலை யுண்டோ.

maṇigaḷiṯ caraḍeṉa vuyirdoṟu nāṉā matandoṟu moruvaṉā maruviṉai nīdāṉ

maṇigaḍain deṉamaṉa maṉameṉuṅ galliṉ maṟuvaṟak kaḍaiyaniṉ ṉaruḷoḷi mēvum

maṇiyoḷi yeṉappiṟi doruporuṭ paṯṟu maruvuṟa lilainiṙaṟ paḍidagaṭ ṭiṉviṇ

maṇiyoḷi paḍaniṙal padiyumō vuṉṉiṉ maṟuporu ḷaruṇanal loḷimalai yuṇḍō.

பதச்சேதம்: மணிகளில் சரடு என உயிர்தொறும் நானா மதந்தொறும் ஒருவனா மருவினை நீ தான். மணி கடைந்து என மனம் மனம் எனும் கல்லில் மறு அற கடைய நின் அருள் ஒளி மேவும். மணி ஒளி என பிறிது ஒரு பொருள் பற்றும் மரு உறல் இலை. நிழல் படி தகட்டின் விண்மணி ஒளி பட நிழல் பதியுமோ? உன்னின் மறு பொருள் அருண நல் ஒளி மலை உண்டோ?

Padacchēdam (word-separation): maṇigaḷil saraḍu eṉa uyirdoṟum nāṉā matandoṟum oruvaṉā maruviṉai nī tāṉ. maṇi kaḍaindu eṉa maṉam maṉam eṉum kallil maṟu aṟa kaḍaiya niṉ aruḷ oḷi mēvum. maṇi oḷi eṉa piṟidu oru poruḷ paṯṟum maru uṟal ilai. niṙal paḍi tagaṭṭiṉ viṇmaṇi oḷi paḍa niṙal padiyumō? uṉṉiṉ maṟu poruḷ aruṇa nal oḷi malai uṇḍō?

அன்வயம்: மணிகளில் சரடு என உயிர்தொறும் நானா மதந்தொறும் நீ தான் ஒருவனா மருவினை. மணி கடைந்து என மனம் மனம் எனும் கல்லில் மறு அற கடைய நின் அருள் ஒளி மேவும். மணி ஒளி என பிறிது ஒரு பொருள் பற்றும் மரு உறல் இலை. நிழல் படி தகட்டின் விண்மணி ஒளி பட நிழல் பதியுமோ? அருண நல் ஒளி மலை, உன்னின் மறு பொருள் உண்டோ?

Anvayam (words rearranged in natural prose order): maṇigaḷil saraḍu eṉa uyirdoṟum nāṉā matandoṟum nī tāṉ oruvaṉā maruviṉai. maṇi kaḍaindu eṉa maṉam maṉam eṉum kallil maṟu aṟa kaḍaiya niṉ aruḷ oḷi mēvum. maṇi oḷi eṉa piṟidu oru poruḷ paṯṟum maru uṟal ilai. niṙal paḍi tagaṭṭiṉ viṇmaṇi oḷi paḍa niṙal padiyumō? aruṇa nal oḷi malai, uṉṉiṉ maṟu poruḷ uṇḍō?

English translation: Like the thread in [a string of] gems, you alone shine as the one [real substance] in each soul and each of the many matas [spiritual philosophies, religions or systems of belief]. Like grinding a gem [to polish it], when one grinds the mind on the stone called mind to remove [its] blemishes, the light of your grace will shine forth. Like the light of a gem [whose brightness and colour are unaffected by nearby objects], attachment to any other thing will not occur [in a mind that has thus been polished]. When sunlight has fallen on a photographic film, can any shadow [or image] be imprinted on it? Aruna, hill of intense light, is there anything other than you?

Show explanations and discussions

Verse 6

Show Tamil

உண்டொரு பொருளறி வொளியுள மேநீ

யுளதுனி லலதிலா வதிசய சத்தி

நின்றணு நிழனிரை நினைவறி வோடே

நிகழ்வினைச் சுழலிலந் நினைவொளி யாடி

கண்டன நிழற்சக விசித்திர முள்ளுங்

கண்முதற் பொறிவழி புறத்துமொர் சில்லா

னின்றிடு நிழல்பட நிகரருட் குன்றே

நின்றிட சென்றிட நினைவிட வின்றே.

uṇḍoru poruḷaṟi voḷiyuḷa mēnī

yuḷaduṉi laladilā vatiśaya śatti

niṉḏṟaṇu niṙaṉirai niṉaivaṟi vōḍē

nikaṙviṉaic cuṙalilan niṉaivoḷi yāḍi

kaṇḍaṉa niṙaṯcaga vicittira muḷḷuṅ

kaṇmudaṯ poṟivaṙi puṟattumor sillā

ṉiṉḏṟiḍu niṙalpaḍa nihararuṭ kuṉḏṟē

niṉḏṟiḍa ceṉḏṟiḍa niṉaiviḍa viṉḏṟē.

பதச்சேதம்: உண்டு ஒரு பொருள் அறிவு ஒளி உளமே நீ. உளது உனில் அலது இலா அதிசய சத்தி. நின்று அணு நிழல் நிரை நினைவு அறிவோடே நிகழ்வினை சுழலில் அந் நினைவு ஒளி ஆடி கண்டன நிழல் சக விசித்திரம் உள்ளும் கண் முதல் பொறி வழி புறத்தும் ஒர் சில்லால் நின்றிடும் நிழல்படம் நிகர். அருள் குன்றே, நின்றிட சென்றிட, நினை விட இன்றே.

Padacchēdam (word-separation): uṇḍu oru poruḷ aṟivu oḷi uḷamē nī. uḷadu uṉil aladu ilā atiśaya śatti. niṉḏṟu aṇu niṙal nirai niṉaivu aṟivōḍē nikaṙviṉai suṙalil a-n-niṉaivu oḷi āḍi kaṇḍaṉa niṙal jaga-vicittiram uḷḷum kaṇ mudal poṟi vaṙi puṟattum or sillāl niṉḏṟiḍum niṙal-paḍam nihar. aruḷ-kuṉḏṟē, niṉḏṟiḍa seṉḏṟiḍa, niṉai viḍa iṉḏṟē.

அன்வயம்: அறிவு ஒளி உளமே நீ ஒரு பொருள் உண்டு. உனில் அலது இலா அதிசய சத்தி உளது. நின்று அணு நிழல் நினைவு நிரை அறிவோடே நிகழ்வினை சுழலில், ஒர் சில்லால் நின்றிடும் நிழல்படம் நிகர், நிழல் சக விசித்திரம் உள்ளும் கண் முதல் பொறி வழி புறத்தும் அந் நினைவு ஒளி ஆடி கண்டன. அருள் குன்றே, நின்றிட சென்றிட, நினை விட இன்றே.

Anvayam (words rearranged in natural prose order): aṟivu oḷi uḷamē nī oru poruḷ uṇḍu. uṉil aladu ilā atiśaya śatti uḷadu. niṉḏṟu aṇu niṙal niṉaivu nirai aṟivōḍē nikaṙviṉai suṙalil, or sillāl niṉḏṟiḍum niṙal-paḍam nihar, niṙal jaga-vicittaram uḷḷum kaṇ mudal poṟi vaṙi puṟattum a-n-niṉaivu oḷi āḍi kaṇḍaṉa. aruḷ-kuṉḏṟē, niṉḏṟiḍa seṉḏṟiḍa, niṉai viḍa iṉḏṟē.

English translation: There is only one substance, you, the heart, the light of awareness. In you exists an extraordinary power, which is not other. From, along with awareness, series of subtle shadowy thoughts in the whirl of destiny are seen, the mirror, that mind-light, as a shadowy world-picture both inside and outside via senses such as the eye, like a shadow-picture that stands out by a lens. Hill of grace, let them cease or let them go on, they do not exist at all apart from you.

Explanatory paraphrase: There is only one substance, you, the heart, the light of awareness. In you exists an extraordinary power, which is not other [than you]. [Appearing] from [that] along with awareness, series of subtle shadowy thoughts [spinning] in the whirl of destiny are seen [on] the mirror [that is] that mind-light as a shadowy world-picture both inside and outside via senses such as the eye, like a shadow-picture that stands out [or is projected] by a lens. Hill of grace, let them cease or let them go on, they do not exist at all apart from you.

Show explanations and discussions

Verse 7

Show Tamil

இன்றக மெனுநினை வெனிற்பிற வொன்று மின்றது வரைபிற நினைவெழி லார்க்கெற்

கொன்றக முதிதல மெதுவென வுள்ளாழ்ந் துளத்தவி சுறினொரு குடைநிழற் கோவே

யின்றகம் புறமிரு வினையிறல் சன்ம மின்புதுன் பிருளொளி யெனுங்கன விதய

மன்றக மசலமா நடமிடு மருண மலையெனு மெலையறு மருளொளிக் கடலே.

iṉḏṟaha meṉuniṉai veṉiṟpiṟa voṉḏṟu miṉḏṟadu varaipiṟa niṉaiveṙi lārkkeṟ

koṉḏṟaha mudithala meduveṉa vuḷḷāṙn duḷattavi cuṟiṉoru kuḍainiḻaṟ kōvē

yiṉḏṟaham puṟamiru viṉaiyiṟal jaṉma miṉbutuṉ biruḷoḷi yeṉuṅkaṉa vidaya

maṉḏṟaha macalamā naḍamiṭu maruṇa malaiyeṉu melaiyaṟu maruḷoḷik kaḍalē.

பதச்சேதம்: இன்று அகம் எனும் நினைவு எனில், பிற ஒன்றும் இன்று. அது வரை, பிற நினைவு எழில், ‘ஆர்க்கு?’, ‘எற்கு’, ஒன்று ‘அகம் உதி தலம் எது?’ என. உள் ஆழ்ந்து உள தவிசு உறின், ஒரு குடை நிழல் கோவே. இன்று அகம் புறம், இரு வினை, இறல் சன்மம், இன்பு துன்பு, இருள் ஒளி எனும் கனவு. இதய மன்று அகம் அசலமா நடமிடும் அருணமலை எனும் எலை அறும் அருள் ஒளிக் கடலே.

Padacchēdam (word-separation): iṉḏṟu aham eṉum niṉaivu eṉil, piṟa oṉḏṟum iṉḏṟu. adu varai, piṟa niṉaivu eṙil, ‘ārkku?’, ‘eṟku’, oṉḏṟu ‘aham udi thalam edu?’ eṉa. uḷ āṙndu uḷa tavicu uṟiṉ, oru kuḍai niḻal kōvē. iṉḏṟu aham puṟam, iru viṉai, iṟal jaṉmam, iṉbu tuṉbu, iruḷ oḷi eṉum kaṉavu. idaya-maṉḏṟu aham acalamā naḍam-iḍum aruṇamalai eṉum elai-aṟum aruḷ oḷi-k kaḍalē.

அன்வயம்: அகம் எனும் நினைவு இன்று எனில், பிற ஒன்றும் இன்று. அது வரை, பிற நினைவு எழில், ‘ஆர்க்கு?’, ‘எற்கு’, ‘அகம் உதி தலம் எது?’ என ஒன்று. உள் ஆழ்ந்து உள தவிசு உறின், ஒரு குடை நிழல் கோவே. அகம் புறம், இரு வினை, இறல் சன்மம், இன்பு துன்பு, இருள் ஒளி எனும் கனவு இன்று. இதய மன்று அகம் அசலமா நடமிடும் அருணமலை எனும் எலை அறும் அருள் ஒளிக் கடலே.

Anvayam (words rearranged in natural prose order): aham eṉum niṉaivu iṉḏṟu eṉil, piṟa oṉḏṟum iṉḏṟu. adu varai, piṟa niṉaivu eṙil, ‘ārkku?’, ‘eṟku’, ‘aham udi thalam edu?’ eṉa oṉḏṟu. uḷ āṙndu uḷa tavicu uṟiṉ, oru kuḍai niḻal kōvē. aham puṟam, iru viṉai, iṟal jaṉmam, iṉbu tuṉbu, iruḷ oḷi eṉum kaṉavu iṉḏṟu. idaya-maṉḏṟu aham acalamā naḍam-iḍum aruṇamalai eṉum elai-aṟum aruḷ oḷi-k kaḍalē.

English translation: If the thought called ‘I’ does not exist, even one other [thought or thing] will not exist. Until then, if any other thought arises, merge [back within by investigating] thus: to whom [has it appeared]; to me; what is the place from which I rose? Sinking [thereby] within, if one reaches the heart-throne, [one will be] the very emperor [seated under] the shade of a single umbrella [namely God, the supreme lord of this and every other world]. The dream [of duality], which consists of [pairs of opposites such as] inside and outside, the two karmas [good and bad actions], death and birth, happiness and misery, darkness and light, will [then] not exist. [What will exist is] only the infinite ocean of the light of grace called Arunamalai, which dances motionlessly [as ‘I am only I’] in the court of the heart.

Show explanations and discussions

Verse 8

Show Tamil

கடலெழு மெழிலியாற் பொழிதரு நீர்தான் கடனிலை யடைவரை தடைசெயி னில்லா

துடலுயி ருனிலெழு முனையுறு வரையி லுறுபல வழிகளி லுழலினு நில்லா

திடவெளி யலையினு நிலையிலை புள்ளுக் கிடநில மலதிலை வருவழி செல்லக்

கடனுயிர் வருவழி சென்றிட வின்பக் கடலுனை மருவிடு மருணபூ தரனே.

kaḍaleṙu meṙiliyāṯ poṙidaru nīrdāṉ kaḍaṉilai yaḍaivarai taḍaiceyi ṉillā

duḍaluyi ruṉileṙu muṉaiyuṟu varaiyi luṟupala vaṙigaḷi luṙaliṉu nillā

diḍaveḷi yalaiyiṉu nilaiyilai puḷḷuk kiḍanila maladilai varuvaṙi sellak

kaḍaṉuyir varuvaṙi seṉḏṟiḍa viṉpak kaḍaluṉai maruviḍu maruṇabhū dharaṉē.

பதச்சேதம்: கடல் எழும் எழிலியால் பொழிதரும் நீர்தான் கடல் நிலை அடைவரை தடை செயின் நில்லாது. உடல் உயிர் உனில் எழும் உனை உறு வரையில் உறு பல வழிகளில் உழலினும் நில்லாது. இட வெளி அலையினும் நிலை இலை புள்ளுக்கு; இடம் நிலம் அலது இலை; வரு வழி செல்ல கடன். உயிர் வரு வழி சென்றிட, இன்பக் கடல் உனை மருவிடும், அருண பூதரனே.

Padacchēdam (word-separation): kaḍal eṙum eṙiliyāl poṙidarum nīr-tāṉ kaḍal-nilai aḍaivarai taḍai-seyiṉ nillādu. uḍal-uyir uṉil eṙum uṉai uṟu-varaiyil uṟu pala vaṙigaḷil uṙaliṉum nillādu. iḍa veḷi alaiyiṉum nilai ilai puḷḷukku; iḍam nilam aladu ilai; varu vaṙi sella kaḍaṉ. uyir varu vaṙi seṉḏṟiḍa, iṉba-k-kaḍal uṉai maruviḍum, aruṇa-bhūdharaṉē.

அன்வயம்: கடல் எழும் எழிலியால் பொழிதரும் நீர்தான் கடல் நிலை அடைவரை தடை செயின் நில்லாது. உனில் எழும் உடல் உயிர் உனை உறு வரையில் உறு பல வழிகளில் உழலினும் நில்லாது. இட வெளி அலையினும் புள்ளுக்கு நிலை இலை; நிலம் அலது இடம் இலை; வரு வழி செல்ல கடன். அருண பூதரனே, உயிர் வரு வழி சென்றிட, இன்பக் கடல் உனை மருவிடும்.

Anvayam (words rearranged in natural prose order): kaḍal eṙum eṙiliyāl poṙidarum nīr-tāṉ kaḍal-nilai aḍaivarai taḍai-seyiṉ nillādu. uṉil eṙum uḍal-uyir uṉai uṟu-varaiyil uṟu pala vaṙigaḷil uṙaliṉum nillādu. iḍa veḷi alaiyiṉum puḷḷukku nilai ilai; nilam aladu iḍam ilai; varu vaṙi sella kaḍaṉ. aruṇa-bhūdharaṉē, uyir varu vaṙi seṉḏṟiḍa, iṉba-k-kaḍal uṉai maruviḍum.

English translation: Water showered by clouds, which rise from the ocean, will not stop [even] if obstructed until it reaches its ocean-abode. [Likewise] the embodied soul, which rises from you, will not stop even though it wanders along many paths that it encounters until it reaches you. Though it wanders in the vast sky, for a bird there is no place of rest [there]; except the earth, there is no place [for it to rest]; what it must do is to go the way it came. [Likewise] Aruna-mountain, when the soul goes back the way it came, it will merge in you, the ocean of happiness.

Show explanations and discussions

Michael James is the world’s foremost scholar and English translator of Sri Ramana Maharshi’s writings. He worked closely for years with Sri Sadhu Om.

Translation and introduction © Michael James; licensed under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International license (CC BY-SA 4.0).

Links to Michael James’s Sites

Works by Ramana Maharshi on this Site

CC BY-SA 4.0

You may use the text on this page under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International license (CC BY-SA 4.0).

This page was first published on September 18, 2023 and last revised on September 18, 2023.

Comments

Comments

comments powered by Disqus